பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது

 10/23/2017 - 22:54
1 read

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் திஸ்ஸர பெரேரா 25 ஓட்டங்களையும், திரிமான்னே 19 ஓட்டங்களையும் பெற்றார். 

உஸ்மான் கான் 34 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.2  ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

news24.lk
News24
sri lanka news 24
24 news