ஹர்திக் பாண்ட்யாவை பாராட்டிய இலங்கை ஜாம்பவான்..

 09/26/2017 - 18:40
4 reads

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை முடிந்த 3 போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. மேலும், 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இத்தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

சமீபகாலமாக அபாரமான செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இந்த தொடரிலும் பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் அசத்தி வருகிறார். நேற்றைய மூன்றாவது போட்டியில் சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானும், உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரருமான சங்கக்காரா ட்விட்டர் மூலமாக ஹர்திக் பாண்ட்யாவை பாராட்டியுள்ளார். அதன்படி, ஹர்திக் பாண்ட்யா மிகச்சிறப்பான வீரர் எனவும் இந்திய அணி எல்லா சூழ்நிலையிலும் வெல்லக்கூடிய அணியாக திகழ்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஹர்திக் பாண்ட்யாவும் உங்கள் கனிவான வாழ்த்துக்களுக்கு நன்றி சார் என பதில் ட்வீட் போட்டுள்ளார்.

news24.lk
News24
sri lanka news 24
24 news