மீண்டும் தோல்வி - தொடரை இழந்தது அவுஸ்திரேலியா

 09/25/2017 - 11:11
3 reads

நேற்று  ஞாயிறு நடந்து முடிந்த , மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்திலும் அவுஸ்திரேலியா தோல்வியைத் தழுவி இருக்கிறது . 3-0  என்ற கணக்கில் இந்த 5போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி வென்றுள்ளது . அண்மைக் காலங்களில் சாதனை மேல் சாதனைகளை குவிக்கும் இந்திய அணித் தலைவர் கோலி , இந்தத் தொடரை கைப்பற்றியதன் மூலம் , இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் இன்னொரு சாதனை படைத்துள்ளார் .

எந்த ஒரு மோதலிலும் தோற்காமல் , தொடராக 9ஒரு நாள் ஆட்டப்போட்டிகளில் வென்றவர் என்ற சாதனை இதுவரையில் டோனியின் கைவசம் இருந்தது . இந்த வெற்றி மூலம், கோலியும் இந்த இலக்கை எட்டிப் பிடித்து சமன் செய்துள்ளார். டோனி 2008-09 காலகட்டத்தில் இந்தச் சாதனையை நிலைநாட்டி இருந்தார் . கோலியின் தலைமையின் கீழ் , இதுவரையில் விளையாடிய  38  ஒரு நாள் ஆட்டபோட்டிகளில் 30 மோதல்களை இந்தியா வென்றுள்ளது .

அவுஸ்திரேலிய அணியில் ஆரம்ப ஆட்டம் சோபித்தாலும் , கடைசி 5ஓவர்கள் அபாரமாக வீசப்பட்டதால் , அவுஸ்திரேலிய அணியின் கைகள் கட்டப்பட்டு விட்டன .300என்ற இலக்கை எட்ட முடியாமல் , இவர்கள் திணறும் அளவுக்கு , இந்திய பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது . இந்தத் தடவை நான்காவது இடத்துக்கு உயர்த்தப்பட்ட கார்த்திக் பாண்டி , எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் , 78 ஓட்டங்களை ஆடி எடுத்து , இந்திய வெற்றிக்கு வழிவகுத்து அசத்தி உள்ளார் . இன்னும் இரண்டு ஒரு நாள் ஆட்டப் போட்டிகள் மீதமுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

news24.lk
News24
sri lanka news 24
24 news