2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் லசித் மாலிங்கவின் கருத்து

 06/14/2017 - 19:30
224 reads

இலங்கை கிரிக்கட்டின் தெரிவு குழு சந்தர்ப்பம் வழங்குமாயின் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாட தாம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னுடைய ஒவ்வொரு பந்து வீச்சும் விக்கட்டினை பெற்றுக்கொள்வதற்கான இலக்கினையே கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், 

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் தனக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Lasith Malinga