கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார் உசைன் போல்ட்

 06/13/2017 - 13:22
336 reads

உலகின் அதிவேக வீரர் என கருதப்படும் உசைன் போல்ட் அனைத்து சர்வதேச பந்தயங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜமெய்க்காவில் கடந்த நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்று தனது சொந்த மண்ணில் உணர்ச்சிகரமாக பிரியாவிடை பெற்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டித் தொடரோடு அவர் தடகளப் போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கில் பெருத்த கரகோஷத்துக்கு மத்தியில் உசைன் போல்ட் கண்ணீர் சிந்தினார். உசைன் போல்ட்டுக்கு மரியாதை செலுத்தும் முகமாக ஜெமெய்க்காவின் பிரதமர் என்ட்ருவ் ஹொல்நெஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் அரங்கத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

 

Usain Bolt wins final 100m race in Kingston