கையெழுத்து வேட்டை போராட்டம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

 10/23/2017 - 22:48
1 read

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்து வேட்டை போராட்டம் நேற்று முதல் (22) ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

இந்த போராட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி திருநெல்வேலி, யாழ்ப்பாணம், நல்லூர், சுன்னாகம் என முக்கிய இடங்களில் நடைபெற்றது. 

இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. 

இதே போராட்டம் நேற்றைய தினமே கிழக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தின் மூலம் அவர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

news24.lk
News24
sri lanka news 24
24 news