பிரசன்ன சஞ்ஜீவவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

 10/23/2017 - 22:36
1 read

மேல் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்ஜீவவை பிணையில் விடுவிக்க இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தர்க்கா நகரில் அரச வைத்தியர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிரசன்ன சஞ்ஜிவ நேற்று முன்தினம் அளுத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த வேளை, அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க முற்பட்டதாக, தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

news24.lk
News24
sri lanka news 24
24 news