பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்

 10/20/2017 - 17:15
8 reads

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை வட்டகொடை பகுதியில் இன்று (20) தனியார் பஸ் மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் வட்டகொடை தோட்டப் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

news24.lk
News24
sri lanka news 24
24 news