இவர்களும் தண்டிக்கப்படல் வேண்டும் - விஜயகலாவிற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

 09/29/2017 - 16:21
140 reads

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனும் தண்டிக்கப்படல் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுத்தீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய மற்றும் திட்டமிட்ட நபர்களை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்திருந்த நிலையில் அவர்களை தப்பித்து செல்ல உறுதுணையாக செயற்பட்டார் என விஜயகலா மகேஷ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கும் தண்டனை வழங்கப்படுதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியே குறித்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு புரண ஹர்த்தால் 30 09 2017 (சனிக்கிழமை) குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்கள் குற்றவாளிகளாவர். இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் வித்தியாவிற்கு முழுமையான நீதி வேண்டும் என அந்த சுவரொட்டியில் பிரசுரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவி வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு பிரிதொரு இடத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரில் எழுவர் நேற்று முன்தினம் குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு மரணதண்டனை கைதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

news24.lk
News24
sri lanka news 24
24 news