கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

 08/24/2017 - 13:51
3 reads

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கபில ஜெயசேகர இன்று(24) பதவியேற்றார்.இதனையொட்டி மட்டக்களப்பு கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாக்கொட ஆராச்சி தலைமையில் இடமபெற்ற பதவியேற்பு வைபவங்களில் சமயத்தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர உள்ளிட்ட திருகோணமலை அம்பறை பிரதி பொலிஸ்மா அதிபர்கள் பொலிஸ் அத்தியட்சகர்கள் உயர் பொலிஸ் அதிகாரிகள் சமுக பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமை புரிந்த சுமித் எதிரிசிங்க கடந்த மாதம் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

news24.lk
News24
sri lanka news 24
24 news