குப்பைகளை அகற்றுவது தொடர்பாக இன்று மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிரந்தர தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டது

 06/19/2017 - 16:31
1 read

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக இன்று (19.06.2017) மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிரந்தர தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்பொழுது கடந்த சில மாதங்களாக அட்டன் நகரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் உள்ள சிக்கல்நிலைகுறித்து பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன்பொழுது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் அட்டன் நகர குப்பைகளை அகற்றுவதற்கான இடமொன்றினை தேர்ந்தெடுப்பது தொடர்பில் அமைச்சரவைக்கு தனது அமைச்சோடு இணைந்து முன்வைத்த இணை அமைச்சரவை பத்திரத்தினூடாக அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்இ அதற்கான இடத்தினை அரசியல் பிரதிநிதிகள்இ அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல்இ கட்சி பேதமில்லாமல் இணைந்து தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இடத்தினை தேர்வு செய்வதற்கான கூட்டத்தினை நடாத்துவதற்கு உடனடியான திகதியொன்றினையும் தீர்மானிக்குமாறும் கேட்டுக் கொண்டார். இதனிடையே இன்றே இதற்கான தீர்வு வேண்டுமென சபையில் கூச்சலிட்டதும் சபை குழப்ப நிலையை அடைந்தது.

தற்காலிக தீர்வாக அம்பகமுவை பிரதேச சபைக்குட்பட்ட ரிக்காடனிலும்இ நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பத்தனை பிரதேசத்திலும் பிரித்தொதுக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் இவ்விரு இடங்களுமே குப்பைகளை மீள்சுழற்சிக்குட்படுத்தி உரம் தயாரிக்கும் இடத்திற்கான அனுமதியே கிடைக்கப்பெற்றிருப்பதால் பிரித்தொதுக்கப்படாத குப்பைகளை குறித்த இடங்களில் கொட்டுவதால் இரு இடங்களையுமே எதிர்காலத்தில் இழக்க நேரிடும்.

எனவே பிரித்தொதுக்கப்படாத குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

thigambaram