விக்னேஷ்வரனுக்கான மக்கள் ஆதரவினை வெளிக்கொணரும் காணொளி

 06/16/2017 - 18:05
219 reads

வட மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் இன்று மக்களை சந்தித்துள்ளார்.

அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பதவி விலகுமாறு முதலமைச்சர் வலியுறுத்தியதை அடுத்து மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினரின் ஆதரவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் 21 பேரின் கையொப்பத்துடன் விக்னேஷ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 15 பேரின் ஆதரவுடனான கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழில் ஹர்த்தால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஹர்த்தாலில் ஈடுபட்ட மக்களை சி.வி.விக்னேஷ்வரன் சந்தித்தபோது உரை நிகழ்த்தியதை காணொளியில் காணலாம்.