இந்திய பெருங்கடலில் பாரிய நில நடுக்கம் ஏற்படலாம்

 09/25/2017 - 14:25
136 reads

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர்இ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

பாபு கலயில்அந்த கடிதத்தில் இந்தியப் பெருங்கடலில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியாஇ சீனாஇ ஜப்பான்இ பாகிஸ்தான்இ நேபாளம்இ வங்கதேசம்இ தாய்லாந்துஇ இந்தோனேசியாஇ ஆப்கானிஸ்தான்இ இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதனால் கடலில் மணிக்கு 120 கி.மீ. முதல் 180 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன்இ கனமழையும் பெய்யக்கூடும். மேலும்இ சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்' என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news24.lk
News24
sri lanka news 24
24 news