ரூபாய் 50 லட்சக்கு உடல் முழுதும் டாட்டூ

 09/21/2017 - 12:33
11 reads

உடல் பகுதிகளில் டாட்டூ போட்டுக்கொள்வது தற்போதைய காலத்தில் பேஷனாகிவிட்ட சூழலில், ரூபாய் 50 லட்சம் செலவு செய்து தன்னுடைய உடலில் பிறப்புறுப்பு உள்பட 90 சதவீத இடங்களில் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகிறார் ஆஸ்திரேலிய மனிதர் ஒருவர்.

உடலில் டாட்டூக்கள் வரைந்துகொள்வதில் பேரார்வம் கொண்ட இவர், தன்னுடைய உடலில் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய பெயரையே டாட்பாய் ஹேட்சன் என்று மாற்றிக் கொண்டார். தனது உடல் முழுக்க டாட்டூக்கள் வரைந்துகொள்ளத் தொடங்கிய இவர் உச்சந்தலை முதல் கால் வரை உடலில் 90 சதவீத இடங்கள் வரை தன்னுடைய கண் இமைகளிலும் நுண்ணிய ஊசிகள் கொண்டு டாட்டூக்கள் வரைந்து கொண்டார்.

இவற்றின் உச்சமாக தன்னுடைய பிறப்புறுப்பிலும் டாட்டூக்கள் வரைந்துகொண்டு வலம் வருகிறார் இந்த டாட்டூ மனிதன்.

news24.lk
News24
sri lanka news 24
24 news