பெட்டிஸ் இற்குள் தங்க மோதிரம் - மோதிரம் யாருக்கு சொந்தம்?

 06/19/2017 - 18:08
542 reads

பெட்டிஸ் இற்குள் தங்க மோதிரம் - முதலாலிக்கா, சாப்பிட்டவருக்கா மோதிரம் யாருக்கு உரித்துடையது?

நாம் உண்ணும் உணவிற்குள் பல்வேறு பாவனைக்குட்பாத பொருட்கள் காணப்பட்டமையை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்றோம்.

கரபொத்தான், தூசுகள், கற்கள், மற்றும் ஏனைய பயன்பாட்டிற்கு உட்படாத பொருட்கள் உணவுகளில் அவ்வப்போது காணப்படுவது வழக்கம்.

அத்துடன் பாண்களிலும் உலோகங்கள் அல்லது ஏனைய பொருட்கள் காணப்படுவதையும் நாம் அவதானித்துள்ளோம். அதே போன்ற ஒரு சுவையான சம்பவம் ஒன்றும் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்ப பகுதியிலேயே இந்த சம்பவம் சம்பவித்துள்ளது.

மட்டக்களப்பு பகுதியில் தயாரிக்கப்பட்ட பெட்டிஸ் இற்குள் தங்க மோதிரம் ஒன்று காணப்பட்டுள்ளது.

40 ரூபாவிற்கு வாங்கிய பெட்டிஸ் இற்குள் 60 ஆயிரம் பெறுமதியான மோதிரம் ஒன்று கிடைத்துள்ளது.

பெட்டிசினை கொள்வனவு செய்த குறித்த நபர் சாப்பிடும் போது பற்களில் கற்களை போன்று கடியுறுவதை அவதானித்துள்ளார்.

இதன் பின்னர் அவர் சுவைத்த பெட்டிசினை உமிழ்ந்து பார்த்த போது பெறுமதியான தங்க மோதிரம் காணப்படுவதை அவதானித்துள்ளார்.

இந்நிலையில், பெட்டிசில் பாவனைக்குட்படாத பொருள் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்காத குறித்த நபர், கிடைத்த மோதிரம் யாருக்கு உரித்துடையது என வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

குறித்த உணவில் கற்கள் காணப்பட்டிருக்குமாயின் உரிமையாளர் இந்த தருணத்தில் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம்.

60 ஆயிரம் பெறுமதியான மோதிரம் என்பதால் உணவு உற்பத்தியில் இழைக்கப்பட்ட் தவறினை அவர் மறந்து செயற்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளரும் கல்லாக இருந்திருப்பின் அவரிடம் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்.

மோதிரம் கடைக்காரருக்கு சொந்தம் என்றால் பாதிக்கப்பட்ட நபர் நிச்சம் வழக்கு தொடருவார், மோதிரம் குறித்த நபருக்கு சொந்தமாகும் பட்சத்தில் சமரசமாக செல்ல கூடிய வாய்பு காணப்படுகிறது.

Gold Ring inside the pettis