நெருங்கும் திருமணம்

 06/13/2017 - 13:35
6 reads

நடிகர் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் 6ம் தேதி மணக்க உள்ளார் சமந்தா. திருமணம் முடிந்தபிறகும் நடிப்பை தொடர எண்ணி உள்ளதுடன் திருமணம் முடிந்ததும் கணவருடன் வெளிநாட்டுக்கு தேனிலவு செல்கிறார். இதற்கிடையில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கும் அவசரத்தில் இருக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கியிருக்கும் சமந்தா, இரும்புத்திரை, அநீதிக் கதைகள் படங்களிலும் ஏற்கனவே நடித்தார்.

மீண்டும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் படப்பிடிப்பில் இன்னும் 4 நாட்களில் பங்கேற்க உள்ளார். அதேபோல் மோகன்ராஜா இயக்கும் படத்தில் ஏற்கனவே முடித்த காட்சிகள் போக மீதமுள்ள காட்சிகளிலும் நடித்து தர ஓ.கே சொல்லியிருக்கிறார்.

இடையிடையே திருமண வேலைகளை கவனித்து வரும் சமந்தா திருமணத்துக்காக ஸ்பெஷல் உடைகளை தானே தேர்வு செய்து வித்தியாசமான டிசைன் அமைக்க ஆர்டர் கொடுத்திருக்கிறார். அதேபோல் நாக சைதன்யாவும் திருமண கொண்டாட்டத்தில் கவனத்தை திருப்பி இருக்கிறார். இதற்காக இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ‘நரகாசூரன்’ படத்திலிருந்தும் விலகி இருக்கிறார்.