இலங்கை வீரர்களின் தவறவிடப்பட்ட பிடியெடுப்பினால் நழுவிய வாய்ப்பு (காணொளி)

 06/13/2017 - 12:55
116 reads

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மிக முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிய இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்;ப்பை இலங்கைக்கு வழங்கியது.

அதன்பிரகாரம் இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்கெல்ல அதிகபட்சமாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜுனைட் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.
அந்த மணியின் தலைவர் ஷப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில் இலங்கை அணியினரின் மோசமான களத்தடுப்பே தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷப்ராஸ் அஹமட்டை ஆட்டமிழக்கச் செய்யவேண்டிய இரண்டு பிடிகளை தவறவிட்டமை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
திசர பெரேரா, சீக்குகே பிரசன்ன ஆகியோர் இந்த பிடிகளை தவறவிட்டிருந்தனர்.

அதன் காணொளியை இங்கே காண்க.

Catches win matches