"பேண்தகு இலங்கை” - நிகழ்வு ஆரம்பம்

 03/31/2017 - 18:04
7 reads

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப செயற்படுத்தப்படும் நச்சுத்தன்மையற்ற நாடு மூன்று வருடகால செயற்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப “பேண்தகு இலங்கை” தேசிய நிகழ்வு இன்று முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வின் ஆரம்ப வைபவம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு நாளை முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேண்தகு இலங்கை
Maithripala
President
ஜனாதிபதி