ப்ளேபோய் காலமானார்

 09/28/2017 - 17:54
3 reads

அமேரிக்காவிலிருந்து வெளியாகும் உலகம் முழுவதும் பிரபலமுடைய இதழான ‘பிளேபாய்’-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமாகியுள்ளார்.

இன்று காலமான இவருக்கு 91 வயது ஆகும்.

1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனையை படைத்தது.

 இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம்.

இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கௌரவமாக கருதினர்

1975-ம் ஆண்டுகளில் 70 லட்சம் பிரதிகள் வரை விற்ற இந்த இதழானது, தற்போது இணையதளத்தின் வளர்ச்சியினால் மாதம் எட்டு லட்சம் பிரதிகள் அளவுக்கு மட்டுமே விற்பனையாகிறது.

இவர் 86 ஆவது வயதிலும் தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

news24.lk
News24
sri lanka news 24
24 news