முதல்முறையாக பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி

 09/27/2017 - 13:12
4 reads

நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் செலுத்த அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது தொடர்பான ஆணை அமுல்படுத்தப்படும் என்றும் சவுதி அரேபிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

தற்போது சவுதி அரேபியாவில் உள்ள சட்டத்தின்படி, ஆண்களுக்கு மட்டுமே செலுத்துநர் உரிமம் வழங்கப்படுகிறது. பொது வெளியில் வாகனம் ஒட்டிச் செல்லும் பெண்கள் கைது செய்யப்படவும், அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தற்போதைய நடைமுறை சட்டத்தால் பல குடும்பங்களும் தங்கள் வீட்டு பெண்கள் பயணம் செய்ய தனியார் செலுத்துநர்களை  பணியில் அமர்த்துகின்றனர்.

சவுதியில் உள்ள உரிமைகள் குழுக்கள், பெண்களை வாகனம் செலுத்த அனுமதிக்க வேண்டுமென கோரி, பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான், மன்னரின் ஆணை குறித்து கூறுகையில், 'இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்' என்றும், சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் செலுத்த அனுமதிக்கும் ஆணையொன்றை சவுதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ள நிலையில்,  இந்த முடிவை ஐ..நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் வரவேற்றுள்ளார்.

இதே போல இந்த முடிவை சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று அமெரிக்க அரசு துறை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

news24.lk
News24
sri lanka news 24
24 news