நாடாளுமன்ற தேர்தலில் இமானுவெல் மக்ரேன் முன்னிலையில்

 06/12/2017 - 13:25
3 reads

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார். 

இதற்கமைய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார். 

இதன் மூலம் பிரான்ஸின் இளம் ஜனாதிபதி என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது. 

அந்தத் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 08.00 மணிவரை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது. 

முதல் சுற்று முடிவில் மக்ரோன் கட்சி 32.32 வீத வாக்குகள் பெற்றுள்ளது. 

பிரான்ஸின் பிற கட்சிகளான பிரண்ட் நேஷனல் 13.20 வீத, வாக்குகளும் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 9.5 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

இரண்டாம் சுற்று முடிவுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். 

France

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.