பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளருக்கு 25 வயது மூத்த மனைவி

 04/24/2017 - 14:41
637 reads

பிரான்ஸ் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு மெக்ரோனுக்கு இருப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர் தொடர்பில் சுவாரஷ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

எமானுவேல் மெக்ரோனுக்கு தற்போது வயது 39 ஆகும். அவரது மனைவி பிரிஜெட் ட்ரொனு, மெக்ரோனை விட 25 வயது மூத்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதான பிரிஜெட் பிரான்ஸ் இன் அடுத்த முதற் பெண்மணியாகும் அதிர்ஷ்டசாலியாவார் என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

பிரிஜெட்டுக்கு ஏழு பேரப்பிள்ளைகள் உள்ளனர். மெக்ரோன் 17 வயது மாணவராக இருந்தபோது அவருக்கு நாடகக் கலை ஆசிரியராக பிரிஜெட் இருந்துள்ளார்.
அப்போது மெக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தியதாக பிரிஜெட் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் நாம் புதிய பக்கத்தை எழுதியிருக்கிறோம் என ஜனாதிபதி வேட்பாளர் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நால்வர் போட்டியிட்டனர். எனினும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இருவருக்கு அடுத்த கட்ட போட்டியிடலுக்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் எமானுவேல் மெக்ரோன் மற்றும் மரின் ல பென் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுயேட்சை வேட்பாளர் மெக்ரோன் 23.9 வீத வாக்குகளையும் தேசிய முன்னணி வேட்பாளர் மரின் ல பென் 21.4 வீத வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மூலம்: டெய்லிமெயில் - தமிழில்: இராமானுஜம் நிர்ஷன்)

 

 

Macron
France