திருவண்ணாமலைக்கு படையெடுத்தார் நித்தியானந்தா

 06/16/2017 - 18:34
3 reads

திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலை உச்சியில் நித்தியானந்தம் அண்ணாமலையார் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை ஆக்ரமிக்க நித்தியானந்தாவின் சீடர்கள் கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார்கள் 

சி.பி.எம் கட்சி மற்றும் மக்கள் இணைந்து அதை தடுத்து வருகின்றனர். 

ரஞ்சிதாவுடனான பிரச்சனைக்கு பின் அடங்கியிருந்த நித்தியானந்தா கடந்த வாரம் தனது ஆண், பெண் சீடர்களை அனுப்பி பவழக்குன்றை ஆக்ரமிக்க வைத்தார்.   

இதனை சி.பி.எம். கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர். 

அவர் உத்தரவுப்படி கோட்டாச்சியர் உமாமகேஸ்வரி ஆக்ரமிக்கப்பட்ட இடத்துக்கு போலீஸாருடன் வந்து நித்தியானந்தா சீடர்களுடன் பேசினார். 

குறித்த இடத்தினை விட்டுக்கொடுக்க செய்ய முடியாது என்றவர்கள், கோட்டாச்சியரை ஒருமையில் பேசி, சாபம் விட்டனர். 

இதை செய்தியாளர்கள் படம் பிடிக்க அவர்களுக்கும் சாபம் விட்டனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இறுதியில் காவல்துறை சிலைகளை அப்புறப்படுத்தியதோடு நித்தியானந்தாவின் சீடர்களையும் விரட்டியது.