2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை

 10/23/2017 - 22:38
3 reads

வௌிநாடுகளிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். 

இதன்பொருட்டு சர்வதேச ரீதியாக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்தியா, பாக்கிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

அந்தவகையில், நாட்டரிசி 90000 மெட்ரிக்டொன், சம்பா அரிசி 60 ஆயிரம் மெட்ரிக் டொன், வௌ்ளை பச்சையரிசி 50 மெட்ரிக் டொன் ஆகியவற்றை இறக்குமதி செய்ய கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விலைகள் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெரிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள்களிடம் இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி ஒரு லட்சம் மெட்ரிக் டொன் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும். 

எஞ்சிய ஒரு லட்சம் மெட்ரிக் டொன் அரிசி டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை அடையும் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். 

சந்தை கேள்விக்கு அமைய அரிசியை விநியோகிக்க வாணிபத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

news24.lk
News24
sri lanka news 24
24 news