அரச துறை சார் ஊழியர்களுக்கு ஹேமாசின் உபஹார விசேட பெக்கேஜ் அறிமுகம்

 09/28/2017 - 12:01
5 reads

நாட்டின் நாளாந்த நிர்வாக செயற்பாடுகளில் மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கும் இலங்கையில் அரசதுறை ஊழியர்களை அங்கீPகரிக்கும் வகையில் முன்னணி தனியார் வைத்தியசாலையான ஹேமாஸ் மருத்துவ மனை மற்றும் அதன் ஆய்வுகூட சங்கிலி என்பன தனித்துவமிக்க உபஹார என்ற ஆரோக்கிய பராமரிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் மூலமாக அரச ஊழியர்களும் அவர்களை சார்தி;ருப்பவர்களும் இலவச வெளி நோயாளர் பிரிவு ஆலோசனைகளை உயர்ந்த கழிவு விலையுடனான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் பொலிஸ் துறை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் ஹேமாஸ் மருத்துவமனையின் உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

பிரதிநிதிகளுக்கு உபஹார அஙக்த்துவ அட்டைகளும் வழங்கப்பட்டன.

ஹேமாசின் உபஹாரா ஆரோக்கிய திட்;டமானது பரிசோதனைகள் செயன்முறைகள் ஆய்வகம் கதிர்வீச்சியல் குறைந்த கட்டணத்துடன் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளடங்கிய சிகிச்சைப் பொதியை வழங்குவதன் மூலமாக அனைத்து அரசதுறை ஊழியர்கள், அவர்களது வாழ்க்கைதுணை மற்றும் பிள்ளைகள் ஆகியோர் தனியார் வைத்தியசாலை மருத்துவபராமரிப்பை கட்டுப்;படியான கட்டணத்தில் பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

news24.lk
News24
sri lanka news 24
24 news