புதுக்குடியிருப்பு பிரதேச பொதுநூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

 06/09/2017 - 14:52
3 reads

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைப்;பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மரக்கறி வாணிப தொகுதி மற்றும் பொதுநூலக கட்டடம் என்பன வடமாகாண முதலமைச்சர் அவர்களால் இன்று (09-06-2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் 5.94 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பொதுநூலகம் மற்றும் 9.19 மில்லியன் ரூபா செலவில் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மரக்கறி வாணிபத்தொகுதி என்பன இன்று (09-06-2017) 10.00 மணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் மாகாண சபை உறுப்பினர்;கள் மாகாண அமைச்சின் செயலாளர் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.